ஹோமியோ மருந்துகளை பரிசோதித்து பார்க்க விரும்புகிறீர்களா? நம் உடலில் ஏற்படும் தினசரி பிரச்சினைகளுக்கு இங்கே 9 ஹோமியோ மருந்துகள் தரப்படுகின்றன. மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகு முயன்று பார்க்கலாமே...
இந்த மருந்துகளை அதன் 6-வது அல்லது 30-வது சக்தி (ஞடிவநnஉல)யில் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக சிறிய அளவு வலி போன்றவற்றிற்கு இந்த மருந்துகளை மூன்று முறை எடுத்துக் கொள்ளலாம். உடல்நலம் சாதாரண நிலைமைக்கு திரும்பிய பிறகு நிறுத்தி விடலாம். அசாதாரண வலி முதல் கடுமையான வலிக்கு ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை முதல் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வதை யோசிக்கலாம். இதற்கு மேலும் வலி நிற்கவில்லை எனில் உங்கள் ஹோமியோ மருத்துவரை அணுகவும்.
அல்லியம் சீபா (Allium Cepa) (வெங்காயம்) : கண்களில் கண்ணீரை வரவழைப்பதாலும், மூக்கு ஒழுகுவதாலும் சளி மற்றும் சாதாரண ஜூரத்திற்கு இது சிறந்த மருந்தாகும். குறிப்பாக மூக்கிலிருந்து சளி தண்ணீர் போன்று வந்து மூக்கு எரிச்சலை அதிகப்படுத்தும் போது இந்த மருந்து மிக்க பயனுள்ளதாகும்.
ஆர்னிகா (Arnica) : ஸ்போர்ட்ஸ் காயங்களுக்கும், முதலுதவி செய்வதற்கும் இது முதல் தரமான ஹோமியோ மருந்து. காயத்தால் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் நோய்களுக்கு இம்மருந்து பயன்படுத்தப்படுகிறது. காயத்தை ஆற்ற விரைவில் இது பயன்படும். ஆகவே சிறிய காயங்களுக்கு ஆர்னிகா சிறந்தது.
சமோமில்லா (Chamomilla) : குழந்தைகளுக்கு இது ஒரு அருமருந்து. பல் முளைக்கும்போது, வயிற்று வலி ஆகியவற்றால் குழந்தை அழும்போது சமோமில்லா பயன்படுகிறது. குழந்தை அழுகையை தடுக்க சமோமில்லா சிறந்தது.
ஹைபெரிக்கம் (Hypericum) : நரம்புகளில் ஏற்படும் காயம் அல்லது நரம்புகள் அதிகமுள்ள உடல் பகுதிகளில் ஏற்படும் காயங்கள் உதாரணமாக விரல்கள், பாதங்கள் மற்றும் முதுகு காயங்களுக்கு ஹைபெரிக்காம் சிறந்தது. வலி அதிகரித்துக் கொண்டே செல்லும் காயங்களுக்கு இது சிறந்த மருந்து.
இக்னேஷியா (Ignatia) : இதை ஒரு காலத்தில் பல மன நல மருத்துவர்கள் பயன்படுத்தப் போகிறார்கள். கவலை, மனச் சோர்வு, இறுக்கம் குறிப்பாக காதல் தோல்வி, அன்புக்கு பாத்திரமானவர்களின் மரணம் இவற்றிற்குப் பிறகு ஏற்படும் மன பாதிப்புக்கு இக்னேஷியா சிறந்தது.
மக்னீசியா பாஸ்போரிக்கா (Magnesia Phosphorica) :மாதவிடாய் தசைப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து தசைப்பிடிப்புகளுக்கு இது சிறந்தது.
நக்ஸ் வாமிகா (Nux Vomica) : ஊக்க மருந்துகளால் உருவாகும் உடல்வலிக்கு இது அளிக்கப்படுகிறது. அதிகமாக சாப்பிடுதல் மற்றும் மது அடிமைத்தனம் போன்றவற்றை ஒழிக்க நக்ஸ் வாமிகா பயன்படுத்தப்படுகிறது. இது நடப்புலகில் தினசரி தேவைப்படும் மருந்தாகும்.
பல் சாட்டில்லா (Pulsattilla) : குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அளிக்கப்படும் பொதுவான மருந்தாகும் இது. குறிப்பிட்ட நோய்க்குறிகளுக்கு இது பரிந்துரை செய்யப்படுவதில்லை. மாறாக குறிப்பிட்ட வகையான உடல் மற்றும் மனநோய் கூறுகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. அதாவது இம்மருந்து தேவைப்படும் மனிதர்களின் ரத்தம் உஷ்ணமாக இருக்கும், மற்றவர்களைவிட இவர்கள் குறைவான ஆடைகளையே அணிவார்கள், திறந்த வெளியையே அதிகம் விரும்புவார்கள் மனோவியல் ரீதியாக மென்மையானவர்களாகவும் அதே சமயம் விரைவில் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
ருஸ் டாக்ஸ் (Rhus Tox) : சுளுக்கு, தளர்வு, முறிவு ஆகியவற்றிற்கு இது அளிக்கப்படுகிறது. கையைக் காலை அசைக்கும் போது முதலிலேயே சிலருக்கு வலி ஏற்படும். இதற்கும் இம்மருந்து உதவும், ஃப்ளூ மற்றும் மூட்டு வலி அழற்சி நோயால் வலி கண்டவர்களுக்கும் இது சிறந்த மருந்து.